/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தங்கையை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
/
தங்கையை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
ADDED : ஜூலை 31, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : பழனிசெட்டிபட்டி முட்டைகடை தெரு ஈஸ்வரி 55.
இவரது சகோதரர் தாடிச்சேரி கிழக்குத்தெரு செல்வராஜ் 60. கடந்த ஜூலை 27 ல் சகோதரர், தங்கையை பற்றி உறவினர்களிடம் தவறாக பேசியுள்ளார். அதை கேள்விப்பட்ட ஈஸ்வரி, உப்புக்கோட்டை விலக்கில் பஞ்சர் கடை அருகே நின்றிருந்த சகோதரர் செல்வராஜ்யை துடைப்பத்தால் தாக்கினார். ஆத்திரமடைந்த சகோதரர் ஊன்றுகோலால் ஈஸ்வரியை தாக்கினார். இதில் ரத்தக்காயம் ஏற்பட்ட ஈஸ்வரி, மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.