/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து மகனை தாக்கிய தந்தை மீது வழக்கு
/
இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து மகனை தாக்கிய தந்தை மீது வழக்கு
இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து மகனை தாக்கிய தந்தை மீது வழக்கு
இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து மகனை தாக்கிய தந்தை மீது வழக்கு
ADDED : செப் 07, 2024 06:48 AM
தேவதானப்பட்டி: இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து மகனை அடித்து காயப்படுத்திய தந்தை உட்பட இருவர் மீது வழக்கு.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி, பெரும்பாறையைச் சேர்ந்த சின்னச்சாமி, பவுன்தாய் மகள் கலைச்செல்வி.
தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டியைச் சேர்ந்த கன்னிச்சாமி மகன் சுந்தரபாண்டிக்கு 2007 ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 16 வயது மகள்,13 வயது மகன் உள்ளனர். இந்நிலையில் 2019 ல் கலைச்செல்வி இறந்தார். இதனால் 16 வயது மகள் பாட்டி பவுன்தாயுடன் சென்றார். மகன் தந்தை சுந்தரபாண்டியனுடன் தங்கி 8 ம் வகுப்பு படித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு சுந்தரபாண்டியன் இரண்டாவது மனைவியாக ஜெயலட்சுமியை திருமணம் செய்தார். இருவரும் சிறுவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியும், பெல்ட் மற்றும் உடற்பயிற்சி கருவியால் அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். தேவதானப்பட்டி போலீசார் இருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
--