/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்
/
மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்
மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்
மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்
ADDED : ஜூலை 01, 2024 05:47 AM
கம்பம் : 'மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன் வர வேண்டும்.' என, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலத்தில் வரும் ஆகஸ்ட் 16 ல் நடைபெறும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின் மாநில மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் கம்பத்தில் நடந்தது.
தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து செட்டியார் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில், 'மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும். 1024 பேர்களுக்கு கல்வி பரிசளிப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலை வாய்ப்பு முகாம், மணமாலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த மாநாட்டில் நமது சமுதாயத்தில் விடுபட்டு போன 3 உட்பிரிவுகளை மீண்டும் OBC பட்டியலில் சேர்க்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவும், கர்நாடகா, கேரள அரசுகள் தடுப்பணைகள் கட்டுவதை கைவிட வேண்டும்.
கண்ணகி கோயிலை புனரமைக்க வேண்டும். லோயர்கேம்பில் கண்ணகி கோட்டம் அமைக்க அரசை வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.