/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட பணியாளர் மாற்றம் ஒப்பந்த பணியாளர் பணி நீக்கம்
/
பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட பணியாளர் மாற்றம் ஒப்பந்த பணியாளர் பணி நீக்கம்
பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட பணியாளர் மாற்றம் ஒப்பந்த பணியாளர் பணி நீக்கம்
பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட பணியாளர் மாற்றம் ஒப்பந்த பணியாளர் பணி நீக்கம்
ADDED : ஆக 03, 2024 05:11 AM
பெரியகுளம்: பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இரு மாணவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்ட மருத்துவமனை பணியாளர் போடிக்கும், ஒப்பந்த பணியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
வடுகட்டி பள்ளி மாணவர்கள் சவுந்திரபாண்டியன் 13. தென்றல் 11. கட்டையன் ஊருணியில் குளித்த போது நீரில் மூழ்கி ஜூலை 29ல் பலியாகினர்.
இவர்கள் உடல் பெரியகுளம் மாவட்ட அரசு ஜூலை 30ல் பிரேத பரிசோதனை நடந்தது.
உடலை கட்டும் பணிகளை மேற்கொண்ட மருத்துவமனை உதவி பணியாளர் ஞானசேகரன் 54. ஒப்பந்த பணியாளர் சண்முகம் 40. ஆகியோர் இறந்த மாணவர்களின் உறவினர்களிடம் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு நச்சரித்தனர்.
பணம் தர மறுத்தால் உடலை பெற தாமதமாகும் என கூறி அடம் பிடித்தனர். இதன்பின் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஏற்கனவே குழந்தைகளை பறிகொடுத்து மனவேதனையில் சோகத்தில் இருந்தவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த விவகாரம் அனைவரையும் சங்கடப்படுத்தியது.
இந்த பிரச்னை மருத்துவமனை இணை இயக்குனர் ரமேஷ்பாபு, கண்காணிப்பாளர் குமாரிடம் புகார் சென்றது. இருவரிடம் மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தினர்.
இதில் ஞானசேகரன் போடி அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதலும், சண்முகம் மீது மருத்துவமனை நிர்வாகம், சென்னை ஒப்பந்த பணியாளர்கள் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதனடிப்படையில் ஒப்பந்த நிர்வாகம் சண்முகத்தை டிஸ்மிஸ் செய்தது.