/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைப் பொருட்கள் ஒழிப்பிற்காக தேனி எஸ்.பி.,க்கு முதல்வர் பதக்கம்
/
போதைப் பொருட்கள் ஒழிப்பிற்காக தேனி எஸ்.பி.,க்கு முதல்வர் பதக்கம்
போதைப் பொருட்கள் ஒழிப்பிற்காக தேனி எஸ்.பி.,க்கு முதல்வர் பதக்கம்
போதைப் பொருட்கள் ஒழிப்பிற்காக தேனி எஸ்.பி.,க்கு முதல்வர் பதக்கம்
ADDED : ஆக 13, 2024 12:33 AM

தேனி : தேனி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்க தனிக்கவனம் செலுத்தி சிறப்பாக பணியாற்றிய தேனி எஸ்.பி., சிவபிரசாத்திற்கு முதல்வர் ஸ்டாலின், சிறப்புக் காவல் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்புத்தினம் ஜூன் 26ல் கடைப் பிடிக்கப்பட்டது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், போலீசாரை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, தேர்வு நடந்தது.
இந்நிலையில் தேனி மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் மேற்பார்வையில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 36 வழக்குகள் பதிவு செய்து 605 குற்றவாளிகள் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1876 கி.கி., கஞ்சா போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
கஞ்சா வியாபாரிகளின் 19 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தொடர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந் நடவடிக்கைகளின் அடிப்படையில் தேனி எஸ்.பி., மாநில சிறப்பு காவல் விருது பெற தேர்வானார். நேற்று சென்னை பல்கலை விழாவில் மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் விழா நடந்தது.
இதில் முதல்வர் ஸ்டாலின், தேனி எஸ்.பி.,க்கு சிறப்பு காவல் பதக்கம் வழங்கி கவரவித்து பாராட்டினார்.

