/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பாபிஷேக பணியால் சித்திரை தேரோட்டம் ரத்து
/
கும்பாபிஷேக பணியால் சித்திரை தேரோட்டம் ரத்து
ADDED : ஏப் 16, 2024 04:47 AM
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் சில மாதத்திற்கு முன் நடந்தது.
இதனைத்தொடர்ந்து தன்னார்வலர்கள், உபயதாரர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
கோயில் கருவறை புனரமைப்பு, கோபுரம் பெயின்டிங், கோயில் பிரகாரத்தில் மழைநீர் வடிகால் அமைத்தல், மேல் தளத்தில் தட்டு ஓடு பதித்தல் உட்பட பல்வேறு பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
சிதிலமடைந்த நிலையில் இருந்த தெப்பம் உபயதாரர் மூலம் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது தெப்பத்தில் தேங்கி உள்ள நீர் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுவதாக உள்ளது. கோயில்நிர்வாகத்தினர் கூறியதாவது:
கும்பாபிஷேகம் இன்னும் சில மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இந்தஆண்டு சித்திரைத் திருவிழா மற்றும் தேரோட்டத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

