/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளியில் ரூ.2 கோடி மோசடி கூட்டுறவு வங்கி மேலாளர் கைது
/
குமுளியில் ரூ.2 கோடி மோசடி கூட்டுறவு வங்கி மேலாளர் கைது
குமுளியில் ரூ.2 கோடி மோசடி கூட்டுறவு வங்கி மேலாளர் கைது
குமுளியில் ரூ.2 கோடி மோசடி கூட்டுறவு வங்கி மேலாளர் கைது
ADDED : செப் 14, 2024 02:11 AM

கூடலுார்:கேரளா குமுளி கூட்டுறவு வங்கியில் ரூ.2 கோடி மோசடி செய்த மேலாளர் வைஷாக் மோகனை 38, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இடுக்கி டீலர்ஸ் கூட்டுறவு வங்கியின் கிளைகள் குமுளி, கட்டப்பனை, அடிமாலி ஆகிய இடங்களில் உள்ளன. இதில் குமுளிக் கிளையில் 2021 முதல் குமுளியைச் சேர்ந்த வைஷாக் மோகன் , மேலாளராக இருந்தார். அங்கு பணியாற்றியபோது அவரது உறவினர்கள், நண்பர்கள் பெயரில் போதிய ஆவணங்கள் இன்றி கடன் வழங்கியுள்ளார்.
மேலும் முதலீடு செய்தவர்களின் பணத்திலும் மோசடி செய்துள்ளார். கடன் பெற்றவர்கள் திரும்ப கட்டிய பணத்தை இறந்து போன ஒருவருக்கு மொத்தத் தொகையாக கொடுத்ததாக போலியாக ஆவணம் தயாரித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் வங்கியின் புதிய நிர்வாகக் குழு நடத்திய ஆய்வின்போது இந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி அதிகாரிகள் புகாரில் குமுளி போலீசார் வழக்குபதிவு செய்து பின்னர் குற்றப்பிரிவு போலீசாரிடம் வழக்கை ஒப்படைத்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வைஷாக் மோகன் தலைமறைவானார். மோசடி தொடர்பாக தேடப்பட்டு வந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நேற்று குமுளி கூட்டுறவு வங்கி கிளைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். குமுளிக் கிளையில் ரூ.1.49 கோடியும், கட்டப்பனை கிளையில் ரூ.50 லட்சம் மோசடி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த மோசடி சம்பவத்தால் வங்கியில் முதலீடு செய்த ஏராளமான பொதுமக்கள் பணத்தை திரும்ப பெற வங்கியில் குவிந்தனர்.