
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் 15ம் ஆண்டு விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் ஐசக்பூச்சாங்குளம் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் ஜோஷிபரந்தொட்டு, நிதி நிர்வாக அலுவலர் விஜய் மங்களத்து, கோட்டயம் செயின்ட் ஜோசப் கல்வி மையம் ஆலோசகர் பாஸ்டின் மங்களத்தில் முன்னிலை வகித்தனர்.
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.