/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் சமூக விழிப்புணர்வு கூட்டம்
/
பெரியகுளத்தில் சமூக விழிப்புணர்வு கூட்டம்
ADDED : செப் 04, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் வடகரை நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் பெரியகுளம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வட்டார தலைவர் உமர்அலி யூசுபி தலைமை வகித்தார். வடகரை பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் ஆரிக்அகமது, செயலாளர் அகமது பவ்ஜிதீன் வரவேற்றனர். தலைமை இமாம் மற்றும் ஜாமிஆ அல்ஹீதா அரபிக் கல்லூரி முதல்வர் சதீதுத்தீன் சிறப்புரையாற்றினார் தி.மு.க., மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சேக் அப்துல்லா, வட்டார பள்ளிவாசல் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பொருளாளர் ரியாஜூதீன் மக்தூபி நன்றி கூறினார்.