ADDED : மே 31, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி அல்லிநகரம் முத்தையா ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசகன் பணி நிறைவு விழா தேனியில் தனியார் ஓட்டலில் நடந்தது.
முன்னாள் தலைமை ஆசிரியர் அங்கையன் தலைமை வகித்தார். மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் ஜான்சன், வட்டார கல்வி அலுவலர் ராஜமுருகன் முன்னிலை வகித்தனர். அகன் ஆர்கிடெக்ட்ஸ் கவுதம்ராஜ், நவமணி ஜூவல்லரி கார்த்திகா பழனிக்குமார் உள்பட தொழிலதிபர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கல்வி அலுவலர்கள், ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் பலர் தலைமை ஆசிரியர் சீனிவாசகன் பணியினை வாழ்த்திப் பேசினார். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு அகன் ஆர்கிடெக்ட்ஸ் கவுதம்ராஜ் நினைவு பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் சீனிவாசகன் ஏற்புரை ஆற்றி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள்செய்திருந்தனர்.