ADDED : ஜூலை 04, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சாகசமாக பயணம் செய்த காரை மோட்டார் வாகன துறையினர் கைப்பற்றி போலீசில் ஒப்படைத்தனர்.
கேப் ரோடு பகுதியில் விதிமுறைகள் மீறி ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கியவாறு சாகசமாக பயணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். கடந்த ஒரு மாதத்தில் சாகச பயணம் செய்த சம்பவத்தில் ஐந்து கார்கள் சிக்கின.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் காரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.
அதில் ஒருவர் கேப் ரோடு பகுதியில் காரின் வெளியில் உடல் தெரியும்படி நின்றவாறு ஆபத்தான முறையில் சாகசமாக பயணம் செய்தார். மோட்டார் வாகன துறை அதிகாரிகள் காரை மடக்கி பிடித்து தேவிகுளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.