ADDED : ஜூலை 28, 2024 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் காங்., சார்பில், 'மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சன்னாசி முன்னிலை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியன், மகிளா காங்., தலைவர் கிருஷ்ணவேணி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாவட்ட தலைவர் இனியவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, பெருமாள், சம்சுதின், சதாசிவம், தேனி நகர தலைவர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.