/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சட்டசபை தொகுதி வாரியாக தீர்க்கப்படாத பிரச்னைகள்; பட்டியல் கோரும் வேட்பாளர்கள்

ADDED : ஏப் 11, 2024 06:29 AM
கம்பம் : சட்டசபை தொகுதி வாரியாக நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளின் பட்டியலை தருமாறு, வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் நிர்வாகிகளிடம் கேட்டு வருகின்றனர்.
தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிபட்டி,போடி,கம்பம், பெரியகுளம்(தனி), சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி என்று ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தலில் போட்டியிடுவோரில் தி.மு.க. அ.தி.மு.க., வேட்பாளர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அ .ம.மு.க வேட்பாளர் சென்னையில் வசிக்கிறார். நா.த.க. வேட்பாளர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.
வேட்பாளர்கள் பிரசாரத்தில் சட்டசபை தொகுதியில் உள்ள நீண்டகாலமாக தீர்க்கப்படாதபிரச்னைகளைப் பற்றி பேசி, அதை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதிமொழி அளிக்க தி.மு.க. அ.தி. மு.க. தலைமைகள் வேட்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் வேட்பாளர்களுக்கு தொகுதி பிரச்னைகள் பற்றி தெரியவில்லை, குறிப்பாகஉசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்னைகளின் பட்டியலை அந்த மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளரும் தனது பிரசாரத்தில் இனி பிரச்னைகள் பற்றி பேச தயாராகி வருவதாக அ.ம.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.