நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்டத்திற்கு மே 19 முதல் மே 23 வரை அதிகன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி நகர்பகுதியில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1:30 மணிக்கு துவங்கிய சாரல் மழை ஒரு மணிநேரம் நீடித்தது. இதனால் பலர் மழையில் நனைந்தவாறு பயணித்தனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வைகை அணையில் 16.8 மி.மீ., சோத்துப்பாறை அணையில் 14, பெரியகுளத்தில் 5.2, மஞ்சளாறு அணையில் 3, ஆண்டிப்பட்டியில் 2.8, வீரபாண்டி 2, போடி 2.8, உத்தமபாளையம் 1.2, கூடலுார் 3.6, பெரியாறு அணை 40, தேக்கடி 7.4, சண்முகாநதி அணையில் 3.2 மி.மீ., என 102 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக 7.84 மி.மீ., மழை பதிவானது.

