ADDED : ஜூலை 05, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: மல்லித்தழை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கூடலுார், ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேல் மல்லித்தழை பயிரிட்டுள்ளனர். மழைக்குப் பின் தற்போது அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. வரத்து அதிகம் இருந்தும் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
விவசாயிகள் கூறுகையில்,' சில மாதங்களுக்கு முன் கடுமையான வெப்பத்தால் மல்லித்தழை விளைச்சல் குறைவாக இருந்தது. தற்போது விவசாயிகளை திருப்திப்படுத்தும் வகையில் விளைச்சல் நன்றாக உள்ளது. கிலோவுக்கு ரூ.100 விற்ற மல்லித்தழை தற்போது மதுரை மார்கெட்டில் ரூ.23 ஆக குறைந்துள்ளது. கூலி, போக்குவரத்து செலவிற்கு கூட போதுமானதாக இல்லை.
தென்காசியில் இருந்து மதுரை மார்கெட்டிற்கு இறக்குமதியானதால் விலை குறைந்துள்ளது என்றனர்.