/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோரிக்கையை ஏற்க மறுத்த நகராட்சி தலைவர் மீது கவுன்சிலர்கள் கமிஷனரிடம் முறையீடு

ADDED : ஆக 31, 2024 06:37 AM

தேனி : தேனி நகராட்சியின் தலைவர் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதாக கூறி கமிஷனரிடம் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து முறையிட்டனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் அவசர கவுன்சில் கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா தலைமை வகித்தார். கமிஷனர் ஏகராஜ், துணைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.67.76 கோடி மதிப்பில் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ப்பட உள்ளது. இதற்காக கடன் பெறுவது உள்ளிட்ட 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தை தொடர்ந்து பெண் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு கோரிக்கைகள் பற்றி கூறினர். அப்போது தலைவர் கூட்டம் நிறைவு பெற்றதாக கூறி புறப்பட்டார். இதனை கண்டித்து பெண் கவுன்சிலர்கள், ஆண் கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் உட்பட கவுன்சிலர்கள் கமிஷனர் ஏகராஜ் அறைக்கு சென்று கோரிக்கைகளை தலைவர் கேட்காமல் சென்றதாக கூறி புகார் தெரிவித்தனர்.
மேலும் மாதந்தோறும் கவுன்சில் கூட்டம் நடத்த வேண்டும். வார்டுகளில் ஆய்வுகள் செய்ய வேண்டும்.
பழைய பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து மாற்றத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக முறையிட்டனர்.