/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசாருக்கு குற்றவியல் சட்ட திருத்த பயிற்சி
/
போலீசாருக்கு குற்றவியல் சட்ட திருத்த பயிற்சி
ADDED : மே 30, 2024 04:02 AM

தேனி: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் முறையே பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதீய சாக் ஷயா சன்ஹிதா என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
ஜூலை 1ல் இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். இதனால் தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் மூன்று பேட்ச் போலீசாருக்கு வீரபாண்டி அரசு சட்டக்கல்லுாரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
இதில் முதல் 2 சுற்று போலீசாருக்கு பயிற்சி முடிந்த நிலையில், மூன்றாவது சுற்று பயிற்சி வகுப்புகள் மே 27 முதல் நடந்து வருகின்றன.
சப் -டிவிஷன் அளவிலும் போலீசார் பங்கேற்ற பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.