/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
/
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
ADDED : மே 31, 2024 06:41 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் புள்ளிமான்கோம்பை அருகே விளை நிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் டி.பெருமாள்பட்டி, மூனாண்டிபட்டி, அணைக்கரைப்பட்டி பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் தொடர்கிறது. பச்சை மிளகாய், தக்காளி, பயறு வகைகள், சிறு தானியங்கள் இப்பகுதியில் ஆண்டு முழுவதும் பயிராகிறது. விளைநிலங்களை ஒட்டி உள்ள மலைப்பகுதியில் காட்டு பன்றிகள் அதிகம் உள்ளது. இரவில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையின் நடவடிக்கை இல்லை.
விவசாயிகள் காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டால் வனத்துறையினர் வழக்கு போடுகின்றனர். பல ஆயிரம் செலவு செய்த விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர் என்றனர்.