ADDED : மே 21, 2024 07:46 AM
கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே ஓட்டணை கிராமத்தைச் சேர்ந்தவர் மலை ராஜன் 46, சிறுகுளம் கண்மாயில் மீன் பிடிப்பதற்கான ஏலம் எடுத்து மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகிறார்.
இரு நாட்களுக்கு முன் மலைராஜன் உடன்பிறந்த அண்ணன் மகன் கருப்பசாமி மலைராஜனிடம் 10 கிலோ மீன்கள் கேட்டுள்ளார்.
பணம் கொடுத்து மீன் வாங்க சொன்னதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கருப்பசாமி அரிவாளால் மலை ராஜனை வெட்டியதில் கை மற்றும் விரல்களில் காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். மலைராஜன் மனைவி தாய் என்பவர் கருப்பசாமியின் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்துதட்டி கேட்ட போது, கருப்பசாமி தாய் என்பவரை அசிங்கமாக பேசி, கட்டையால் தாக்கியதில் தலை, காலில் காயம் ஏற்பட்டது. மலைராஜன் புகாரில் கடமலைக்குண்டு எஸ்.ஐ., ராஜசேகர் விசாரித்து வருகிறார்.

