/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.சுப்புலாபுரத்தில் கலங்கலாக வரும் குடிநீர்
/
டி.சுப்புலாபுரத்தில் கலங்கலாக வரும் குடிநீர்
ADDED : மே 07, 2024 05:57 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.சுப்புலாபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வினியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கலங்கலான நிலையில் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆண்டிபட்டி - சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் இந்த ஊராட்சிக்கு குடிநீர் விநியோகம் உள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படும் குடிநீர் சில வாரங்களாக கலங்கலான நிலையில் வருகிறது. ஊராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
2011 மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் ஒதுக்கீடு அளவு உள்ளது. ஒதுக்கீடும் முழுமையாக கிடைக்காததால் அனைத்து பகுதிக்கும் வினியோகம் செய்ய முடியவில்லை. எனவே 10 நாளுக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கிறது. ஊராட்சியில் குடிநீர் விநியோகிக்கும் தொட்டிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது. திம்மரசநாயக்கனூரில் குடிநீர் சேமிப்பு தொட்டியில் இருந்து பம்ப் செய்யப்பட்டு டி.சுப்புலாபுரத்திற்கு அனுப்பப்படுகிறது. இப்பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் கசடுகள் சேர்ந்துள்ளதால் குடிநீர் கலங்கலாக வருகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.