/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் குழாய் பதிப்பில் சேதமான தெருக்கள்
/
குடிநீர் குழாய் பதிப்பில் சேதமான தெருக்கள்
ADDED : மே 03, 2024 06:04 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியில் 'அம்ருத்' திட்டத்தில் 15வது வார்டில் உள்ள 15 க்கும் மேற்பட்ட பெரிய தெருக்கள், 10 சிறிய தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு, பேவர்பிளாக் பதித்த இடங்களில் குழாய் பதிப்புக்காக பள்ளம் தோண்டி சேதப்படுத்தி விட்டனர். வார்டு உறுப்பினர் ரேணுகா கூறியதாவது: குழாய் பதிப்புக்குப்பின் பல வாரங்களாகியும் தெருக்களில் சீரமைப்பு பணி இல்லை. முதியோர், குழந்தைகள் தெருக்களில் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் இடையே 'ஈகோ' பிரச்னை நிலவுகிறது. அனைத்து தெருக்களிலும் மேடு பள்ளங்களை சரி செய்ய வேண்டும். குழாய் பதிப்பின் போது கழிவுநீர் வடிகாலில் பல இடங்களில் மண் குவிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் சுகாதாரப் பாதிப்பும் ஏற்படுகிறது. மாவட்ட அதிகாரிகள் இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.