/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மருத்துவக்கல்லுாரி நுழைவு வாயில் இருளில் தவிப்பு; எரியாத விளக்குகளால் அச்சம்

ADDED : மே 31, 2024 06:30 AM

தேனி: தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மதுரை கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இம் மருத்துவமனைக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள திண்டுக்கல், விருதுநகர், கேரள மாநிலத்தில் இருந்தும் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் மருத்துவமனை, அதன் நுழைவாயில் பகுதியில் 24 மணிநேரமும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும். ரோட்டின் சென்டர் மீடியன் நடுவே அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் ஒரு மாதத்திற்கும் மேலாக எரியவில்லை.இதனால் டூவீலர்களில் வருவோர் வேகத்தடை தெரியாமல் தடுமாறி விழுகின்றனர். அப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளதால், ரோட்டை கடந்து செல்லவும் நோயாளிகள், அவர்களை பார்க்க வருபவர்கள் இரவில் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.