/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி அருகே கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
/
போடி அருகே கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 09, 2024 03:49 AM
போடி, : போடி அருகே ரங்கநாதபுரம் வடக்கு ராஜா தெருவில் வசிப்பவர் ஹரிஹரன் 49. இவருக்கும் வீட்டின் அருகே குடியிருக்கும் தர்மராஜ் என்பவருக்கும் வீட்டின் கழிவு நீர் செல்வது சம்பந்தமாக பிரச்னை இருந்தது.
முன் விரோதம் காரணமாக தர்மராஜ், இவரது மனைவி செல்வி, மகன் அபிஷேக் குமார், சித்தி குமாரி ஆகியோர் சேர்ந்து ஹரிஹரன் வீட்டிற்குள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்து, ஹரிஹரனை தகாத வார்த்தை பேசி, கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தி உள்ளனர்.
தகராறை விலக்கி விட வந்த ஹரிஹரன் மனைவி மணிமேகலா, மகள் யுவ ஸ்ரீ யையும் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
யுவஸ்ரீ யின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயின் அறுந்து கீழே விழுந்துள்ளது.
ஹரிஹரன் புகாரில் போடி தாலுாகா போலீசார் தர்மராஜ், செல்வி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.