ADDED : மே 07, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம்: தேவாரம் அருகே டி. ஓவலாபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 44. இவரது மகன் லோகன் பிரபு, ரோட்டுபட்டியைச் சேர்ந்த ஜேக்ஸ் என்பவரது மனைவியிடம் அலைபேசியில் தொடர்ந்து பேசினார்.
இதனை மனதில் வைத்து கொண்டு நேற்று ஜேக்ஸ், இவரது உறவினர்கள் அபினாஷ், சிவா ஆகியோர் சேர்ந்து லோகன் பிரபு வீட்டின் முன்பாக நின்று தகாத வார்த்தையால் பேசி , வீட்டின் வெளியே இருந்த வாஷிங் மெஷின், பிக்கப் வண்டி கண்ணாடி. டூவீலர், ஜன்னல் கதவுகளை அடித்து சேதம் ஏற்படுத்தி உள்ளனர்.
மனைவியிடம் பேசினால் கொலை செய்யாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஜேக்ஸ், சிவா, அபினாஷ் மூவர் மீது தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.