/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு கல்லுாரிக்கு நிலம் கையகப்படுத்த முடிவு
/
அரசு கல்லுாரிக்கு நிலம் கையகப்படுத்த முடிவு
ADDED : செப் 04, 2024 01:19 AM

மூணாறு, : மூணாறில், தேவிகுளம் ரோட்டில் செயல்பட்ட அரசு கல்லூரி 2018 ஆக.15, 16 ஆகிய நாட்களில் பெய்த கன மழையில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் கட்டடங்கள் சேதமடைந்தன. அதன்பிறகு மூணாறில் பொறியியல் கல்லாரி வளாகத்தில் உள்ள கட்டடத்திற்கு அரசு கல்லூரி மாற்றப்பட்ட நிலையில், தற்போது எம்.ஜி., காலனி அருகில் உள்ள மாவட்ட சுற்றுலா துறைக்கு சொந்தமான பட்ஜெட் ஓட்டல் கட்டடத்தில் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
ஆலோசனை: கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆலோசனை கூட்டம் மூணாறில் கேரள உயர் கல்வி துறை அமைச்சர் பிந்து தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.ராஜா, கலெக்டர் விக்னேஷ்வரி, சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதில் மாவட்ட சுற்றுலாதுறைக்கு சொந்தமான பட்ஜெட் ஓட்டல் கட்டடம், 3.5 ஏக்கர் நிலம் ஆகியவற்றை கையகபடுத்தவும், அதற்கு பதில் சேதமடைந்த கல்லூரி பகுதியில் உள்ள கட்டடம், அதே பகுதியில் 3.5 ஏக்கர் நிலம் ஆகியவற்றை மாவட்ட சுற்றுலாதுறைக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் பிந்து கூறுகையில்., திருவனந்தபுரத்தில் பிற துறைகளுடன் கலந்து ஆலோசித்து நிலம் பரிமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அப்பணிகள் பணிமுடிந்ததும் 'மாஸ்டர் பிளான்' மூலம் கட்டுமானம் நடைபெறும், என்றார்.