/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் வழிகாட்டுனர் நியமிக்க முடிவு
/
மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் வழிகாட்டுனர் நியமிக்க முடிவு
மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் வழிகாட்டுனர் நியமிக்க முடிவு
மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் வழிகாட்டுனர் நியமிக்க முடிவு
ADDED : ஆக 06, 2024 05:39 AM
தேனி, ஆக.6-தேக்கம்பட்டி மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுநர் நியமிக்கப்பட உள்ளனர்.
மாவட்ட அரசு மாதிரி பள்ளி தேக்கம்பட்டியில் செயல்படுகிறது. கடந்தாண்டு இந்த மாதிரி பள்ளி துவங்கப்பட்டது. இங்கு பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பில் தலா 80 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., க்யூட், கிளாட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர் உட்பட 27 ஆசிரியர்கள், விடுதில் 20 பேர் பணிபுரிகின்றனர். இது தவிர மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், மாணவர்கள் உயர்நிலை கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வழிகாட்டுனர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தன்னார்வர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவர் வழிகாட்டுநராக நியமிக்கப்பட உள்ளார்.