/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
/
ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
ஓட்டுப்பதிவு குறைந்த இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
ADDED : ஜூலை 31, 2024 01:39 AM
தேனி:தமிழகத்தில் லோக்சபாதேர்தலில் 50 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுப்பதிவான 2067 ஓட்டுச்சாவடி பகுதி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.,19ல் நடந்த லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியது. ஆனாலும் ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுக்கள் பதிவானது. 1881 ஓட்டுச்சாவடிகளில் 40 முதல் 50 சதவீத ஓட்டுக்களும்,186 ஓட்டுசாவடிகளில் 40 சதவீதத்திற்கு குறைவாக ஓட்டுகள் பதிவானது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே 50 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுப்பதிவான 2067 ஓட்டுச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் (பி.எல்.ஓ.,க்கள்) ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.