/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
என் மீதுள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு தினகரன் பதிலடி
/
என் மீதுள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு தினகரன் பதிலடி
என் மீதுள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு தினகரன் பதிலடி
என் மீதுள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு தினகரன் பதிலடி
ADDED : ஏப் 12, 2024 06:22 AM

தேனி: என் மீதுள்ள வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன். நீதிமன்றத்தில் உள்ள வழக்கிலிருந்து தப்பிக்க பா.ஜ., கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தேனி அல்லிநகரத்தில் நடந்த பிரசாரத்தில் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன், முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று அவர் பேசியதாவது: இங்கு வந்து சென்ற பழனிசாமியும்,தி.மு.க.,வும் கள்ளக்கூட்டணி வைத்துள்ளனர். அது உண்மை என நிரூபிக்கும் வகையில் இருவரும் இங்கு வந்து சென்றுள்ளனர். யாரு பச்சோந்தி என தமிழ்நாட்டுக்கும், தேனி மக்களுக்கு நன்றாக தெரியும். உங்களுடன் 25 ஆண்டு கால பந்தம் உள்ளவன் நான். 14 ஆண்டுகள் இங்கு வரவில்லை. மக்களை பார்த்தாரா என கேட்கின்றனர். நான் மறைந்த ஜெ.,விற்கு கட்டுப்பட்டவன். சிலர் செய்த சதியால் கட்சியை விட்டு ஜெ.,நீக்கினார். பழனிசாமிக்கு அதுகூட தெரியவில்லை.
நான் கட்சிக்கு கட்டுப்பட்டவன். அரசியல் ரீதியாக வருவது ஜெயலலிதாவை மீறிய செயலாக இருக்கும் என இங்கு நான் வராமல் இருந்தேன்.
பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கினார். அதன்பின் சூரியனை பார்த்து என கூறியவர், தற்போது அந்தர் பல்டி அடித்து வயதில் மூத்தவங்க அதனால் காலில் விழுந்தேன் என்கிறார். ஸ்டாலின் என அவரது அப்பா கருணாநிதி எந்த நேரத்தில் பெயர் வைத்தாரோ, கொடுங்காலோனாக இருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை கூறி ஏமாற்றினார்.
வழக்கில் தப்பிக்க பா.ஜ.,விற்கு சென்றேனா
1999ல் இங்கு போட்டியிட்டபோது போதை வழக்கு இருந்தது உங்களுக்கு தெரியும். பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் ஜெயலலிதா மேல் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகும்.
அவ்வழக்கு மீண்டும் வந்துள்ளது. அந்த வழக்கை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன். வழக்குகளில் இருந்து தப்பிக்க பா.ஜ.,விடம் போய் விட்டேன் என கூறுகிறார். உலகத்திலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது இவரது தந்தை ஆட்சி தான். ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லாம் கஷ்டபடுகிறார்கள்.
கட்சத்தீவை இந்திராகாந்தி தாரைவார்த்த போது கருணாநிதி அமைதியாக இருந்தார். ஏனெனில் சர்காரியார் கமிஷன் வழக்கில் கைது செய்துவிடுவார்கள் என அமைதியாக இருந்தார்.
அலைகற்றை ஊழலில் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி ஊழல். காற்றை விற்ற இந்த கட்சி, போதை மருந்து விற்ற கட்சியின் துண்டு சீட்டு முதல்வர் என்னை குறை கூறுகிறார். இங்க வந்த பழனிசாமி, தி.மு.க., வேட்பாளரை பற்றி பேசவில்லை. ஸ்டாலினும் அ.தி.மு.க. வேட்பாளரை பற்றி பேசவில்லை. என்னை குறி வைத்து பேசுகிறார்கள். தி.மு.க., வேட்பாளர் டோக்கன் கொடுத்த கட்சி என்கிறார். டோக்கன் கொடுத்த கட்சியின்பரிசு பெட்டகம் சின்னத்தில் ஏன் போட்டியிட்டீர்கள்.
நீங்கள் நல்லவராக இருந்திருந்தால் அன்றே தி.மு.க.விற்கு ஓடியிருக்க வேண்டும்.
குக்கரை வெற்றி பெற வைத்தால்தான் இரட்டை இலையை மீட்டெடுக்க முடியும் இவ்வாறு பேசினார்.
அரண்மனைப்புதுாரில் பேசியவர், ஏப்., 13ல் தொகுதிக்கு நான் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகள் குறித்து அறிக்கை வெளியிட உள்ளேன்' என்றார்.

