/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திண்டுக்கல் - லோயர்கேம்ப் வரை ரயில்பாதை அமைக்க வேண்டும் போடி நகராட்சி கூட்டத்தில் எம்.பி., யிடம் வலியுறுத்தல்
/
திண்டுக்கல் - லோயர்கேம்ப் வரை ரயில்பாதை அமைக்க வேண்டும் போடி நகராட்சி கூட்டத்தில் எம்.பி., யிடம் வலியுறுத்தல்
திண்டுக்கல் - லோயர்கேம்ப் வரை ரயில்பாதை அமைக்க வேண்டும் போடி நகராட்சி கூட்டத்தில் எம்.பி., யிடம் வலியுறுத்தல்
திண்டுக்கல் - லோயர்கேம்ப் வரை ரயில்பாதை அமைக்க வேண்டும் போடி நகராட்சி கூட்டத்தில் எம்.பி., யிடம் வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2024 05:59 AM
போடி : திண்டுக்கல்-லோயர்கேம்ப் வரை ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என போடி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
போடி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜராஜேஸ்வரி (தி.மு.க.) தலைமையில் நடந்தது.
கமிஷனர் ராஜலட்சுமி, பொறியாளர் குணசேகர், மேலாளர் முனிராஜ். சுகாதார அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., எம்.எல்.ஏ., சரவணக்குமார் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது :
மணிகண்டன்,( பா.ஜ.,) : மாணவர்கள் கல்விக் கடன் கோரி போடி வங்கிகளில் விண்ணப்பித்து 6 மாதங்களுக்கு மேலாகியும் கடன் வழங்காமல் இழுத்தடிப்பதால் மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர். கொட்டகுடி ஆற்றில் தடுப்பணை, போடி - சென்னைக்கு தினசரி ரயில் இயக்க எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்க தமிழ்ச்செல்வன், எம்.பி., : பைபாஸ் ரோடு அமைக்கவும், கொட்டகுடி ஆற்றில் ரூ. 500 கோடி செலவில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
சர்வே பணிகள் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். போடி - சென்னைக்கு தினசரி ரயில் இயக்கவும், திண்டுக்கல் -- சபரிமலை ரயில் பாதை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டு உள்ளன.
சங்கர், (தி.மு.க.,) : சேதம் அடைந்த சார் பதிவாளர் அலுவலகம், நூலக கட்டடம் கட்டுவதற்கு எம்.பி.,வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திண்டுக்கல் -- லோயர் கேம்ப் வரை ரயில் பாதை வசதி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன், (தி.மு.க.,): பாதாள சாக்கடை பணிகள் 100 சதவீதம் முழுமை பெறாமல் உள்ளது. சுகாதார பணிகளில் தொய்வாக உள்ளது.
பாலசுப்பிரமணி, (அ.தி.மு.க.,): காமராஜ் பஜார் ஆக்கிரமிப்பால் மழை பெய்யும் காலங்களில் மெயின் ரோட்டில் கழிவுநீர் செல்கிறது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும்.
எம்.பி., : சாக்கடை, ஹைமாஸ் விளக்கு அமைக்க நகராட்சியில் நிதி இல்லையா.
கமிஷனர் : போதிய நிதி இல்லாமல் உள்ளது.
கவுன்சிலர்கள் : எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
எம்.பி., : நடவடிக்கை எடுக்கப்படும்.