/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
ADDED : மார் 23, 2024 06:10 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 5 தாலுக்காக்களுக்கு அனுப்பப்பட்டது.
லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. இதற்காக மாவட்டத்தில் 1225 ஓட்டுச்சாவடிமையங்கள் தயார் நிலையில் உள்ளன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஓட்டுப்பெட்டிகள் வைப்பு அறையில் இருந்து ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, போடி, உத்தமபாளையம் தாலுகாக்களுக்கு ஓட்டுபெட்டி அனுப்பும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. அரசியல் கட்சியனர் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தாலுகா அலுவலகங்களுக்கு தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து அவை ஸ்கேன் செய்து பிரிக்கப்பட்டன. நேற்று பெட்டிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி துவங்கியது. தாலுகா அலுவலகங்களில் ஓட்டுபெட்டி வைப்பு அறைகளில் வைத்து பாதுகாக்கப்படும். ஒவ்வொரு தாலுகாவிற்கும் தேவையை விட 20 சதவீத இயந்திரங்கள் கூடுதலாக அனுப்ப பட்டுள்ளன. ஓட்டுப்பதிவிற்கு முந்தைய நாள் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

