/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐ.டி.ஐ.,யில் படிக்க விண்ணப்பம் வினியோகம்
/
ஐ.டி.ஐ.,யில் படிக்க விண்ணப்பம் வினியோகம்
ADDED : ஜூலை 03, 2024 05:39 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள 3 அரசு ஐ.டி.ஐ.,களில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, போடி ஐ.டி.ஐ., இருப்பு உப்பார்பட்டி தப்புக்குண்டு ரோட்டில் அரசு ஐ.டி.ஐ., க்கள் செயல்படுகின்றன.
இங்கு இரு ஆண்டு பயிற்சிகளாக பிட்டர், எலக்ட்ரிசியன், மெக்கானிஸ்ட், டர்னர், டிராப்ஸ் மேன் சிவில், ஓராண்டு படிப்புகளான வெல்டர், பம்ப் ஆப்ரேட்டர் கம் மெக்கானிக், மெக்கானிக் டிராக்டர், டி.டி.பி.ஓ., கணினி இயக்குனர் உள்ளிட்ட பாடபிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இவர்கள் 14 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஐ.டி.ஐ.,களுக்கு நேரில் சென்று ஜூலை 15 வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.விண்ணப்பிப்பவர்கள் 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டி.சி., ஜாதிசான்றிதழ், புகைப்படம், ஆதார் உள்ளிட்ட சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தேனி ஐ.டி.ஐ., 94990 55765, ஆண்டிப்பட்டி ஐ.டி.ஐ., 94990 55770, போடி ஐ.டி.ஐ., 94990 55768 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.