/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க.,வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை
/
தி.மு.க.,வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை
ADDED : மார் 23, 2024 06:08 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் 'இண்டியா' கூட்டணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பால ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் முன்னிலை வகித்தனர். கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
தேனி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது: பிற கட்சியினர் ஓட்டுக்கு ரூ.1000, 2000 தந்து வெற்றி பெறலாம். ஆனால் மாதா மாதம் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை தருவது, சிலிண்டர் ரூ.500, பெட்ரோல் ரூ.60 என துணிச்சலாக அறிவித்த ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும் தான். மோடிக்கு குஜராத்தில் மட்டும்தான் செல்வாக்கு. வடமாநிலங்களில் சறுக்கல் தெரிகிறது. கடந்த தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தி.மு.க.,வெற்றி பெற்றது. தேனியில் தோல்வி அடைந்த வருத்தம் முதல்வருக்கு உள்ளது. அதனால் இம்முறை தேனியை தி.மு.க.,விற்கு ஒதுக்கியுள்ளார். என்னை எதிர்த்து யார் நின்றாலும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். நீங்கள் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
தேனி: பழனிசெட்டிபட்டி காங்., அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ' கடந்த முறை தேனி தொகுதியில் காங்., தோற்றது. இம்முறை அ.தி.மு.க.,வை பழிவாங்க இது நல்வாய்ப்பு. யார் வேண்டுமானாலும் எதிர்த்து நிற்கட்டும், சவாலை சந்திப்போம். தி.மு.க..,வெற்றி பெற வையுங்கள்., என்றார்.
நிருபர்களிடம் கூறுகையில், இத்தேர்தலில் எனக்கு ஒரு சவாலும் இல்லை. தினகரனை எதிர்த்து நான் போட்டியிடவில்லை. என்னை எதிர்த்து தான் அவர் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் முடியட்டும். களத்தில் சந்திப்போம்.' என்றார். காங்., மாவட்டத் தலைவர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

