/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் உரிமை தொகை வரவில்லை தி.மு.க.,வேட்பாளரிடம் முதியவர் கேள்வி - துண்டு போர்த்தி சமாதானம்

ADDED : ஏப் 04, 2024 03:58 AM
கூடலுார் : கூடலுாரில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பிரசாரம் செய்த போது ரூ.ஆயிரம் உரிமைத் தொகை எங்களுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பிய முதியவரை துண்டு போர்த்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கூடலுாரில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று மாலை ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். சுக்காங்கல்பட்டி அருகே பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, முதியவர் ஒருவர் 'எங்கள் குடும்பத்திற்கு மகளிர் உரிமைத் தொகை வரவில்லை, பலமுறை மனு அனுப்பியும் கிடைக்கவில்லை' என்றார். நான் வெற்றி பெற்றதும் வராத அனைவருக்கும் பெற்றுத் தருவேன் எனக் கூறி அவருக்கு துண்டு போர்த்தி சமாதானம் செய்து வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் அனுப்பி வைத்தனர். இதைக் கண்ட அங்கிருந்த முதியவர்கள் பலர் எங்களுக்கும் வரவில்லை என கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., செல்வேந்திரன், காங்., மாவட்ட தலைவர் முருகேசன், நகர செயலாளர் லோகந்துரை உள்ளிட்ட பலர் உடன் சென்றனர். தொடர்ந்து ஆங்கூர்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி கருனாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி நாராயணத்தேவன்பட்டி ஊராட்சிகளில் பிரசாரம் செய்தார்.