/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி பஸ் ஸ்டாண்டில் கழுதைகள் தஞ்சம்
/
போடி பஸ் ஸ்டாண்டில் கழுதைகள் தஞ்சம்
ADDED : ஆக 13, 2024 12:35 AM

போடி : போடி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் கழுதைகள் தஞ்சம் அடைந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
போடி நகராட்சியில் பஸ்ஸ்டாண்ட், மெயின் ரோடு, தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்க பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாடுகள், கழுதைகள், நாய்கள் அதிகம் சுற்றி திரிகின்றன.
இதனால் நகரில் மக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. உரிமையாளர்கள் கால்நடைகளை தங்களது சொந்த இடங்களில் கட்டி பாதுகாத்து கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் நகராட்சி மூலம் கால்நடைகளை பிடித்து ஏலம் விடப்படும். சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதுடன், போலீஸ் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி உத்தரவிட்டு பிரசாரம் செய்தது.
சில மாதங்களுக்கு முன் பெயரவிளவிற்கு சில மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பின் தொடர் நடவடிக்கை இல்லை.
போடி பஸ்ஸ்டாண்டில் கழுதைகள் தஞ்சம் அடைந்துள்ளன. இதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் பயணிகள் வரஅச்சம் அடைந்துள்ளனர்.
கழுதைகளை பிடித்து அப்புறப்படுத்த போடி நகராட்சி நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

