/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உடற்பயிற்சி, யோகா செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம்
/
உடற்பயிற்சி, யோகா செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம்
ADDED : ஜூன் 27, 2024 05:02 AM

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் சங்கர் கிளினிக்கை டாக்டர் சி.செல்வராஜ் நடத்தி வருகிறார். இங்கு பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, குழந்தைகள் மருத்துவம் உட்பட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
மாவட்ட ரோட்டரி ஒருங்கிணைப்பாளராக 1983 முதல் 2024 வரை ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். 86 முறை ரத்த தானம் செய்ததால் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் பாராட்டி கேடயம் வழங்கி கவுரவித்தது. கொரோனா காலத்தில் பிரதிபலன் பாராமல் பல உயிர்களை காப்பாற்றியதால், கவியரசு கண்ணதாசன் நூலக வளர்ச்சி குழு, ரோட்டரி சங்கம், இளைஞர் விளையாட்டு கழகம், பசுமை வடுகை, அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து இவருக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவபடுத்தினர்.
டாக்டர் சி.செல்வராஜ் கூறியதாவது: மருத்துவமனைக்கு வருபவரிடம் மனிதநேயம் அடிப்படையில் நோய் குணமாக அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சிகிச்சையுடன் ஆலோசனைகள் வழங்குகிறோம். சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் ரத்ததான முகாம் அடிக்கடி நடத்தி பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ரத்தம் வழங்குகிறோம். அனைவரும் உடற்பயிற்சி, யோகா செய்தால் நோயினை விரட்டி மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.
-- டாக்டர் சி. செல்வராஜ் வடுகபட்டி
98947 31539