/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விலை உயர்வால் நுங்கு, இளநீர் வாங்காமல் தவிர்க்கும் தொழிலாளர்கள்
/
விலை உயர்வால் நுங்கு, இளநீர் வாங்காமல் தவிர்க்கும் தொழிலாளர்கள்
விலை உயர்வால் நுங்கு, இளநீர் வாங்காமல் தவிர்க்கும் தொழிலாளர்கள்
விலை உயர்வால் நுங்கு, இளநீர் வாங்காமல் தவிர்க்கும் தொழிலாளர்கள்
ADDED : மே 01, 2024 08:07 AM
ஆண்டிபட்டி : சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வெயிலின் தாக்கத்தை பொறுக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க அதிக தண்ணீர் குடிக்கவும், பழங்கள், ஜூஸ், இளநீர், நுங்கு ஆகியவை அருந்த ஆலோசனை தருகின்றனர்.
அன்றாட வேலை நிமித்தமாக வெயிலில் அலையும் கூலித் தொழிலாளர்கள் பலரும் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்க அதிக தண்ணீர் குடிக்கும் கட்டாயத்தில் உள்ளனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:
பொது இடங்களில் தரமான குடிநீர் கிடைப்பதில்லை. வீட்டில் இருந்து கொண்டு செல்லும் குடிநீரும் நாள் முழுக்க போதுமானதாக இல்லை.
இதனால் சில நாள் குடிநீரை ரூ.20 விலை கொடுத்து வாங்கவேண்டியுள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு ஒன்றின் விலை ரூ.10, இளநீர் ரூ.30 முதல் 40 வரை, கரும்பு ஜூஸ் ரூ.20, ஒரு எலுமிச்சைபழம் ரூ.10 முதல் 15, பழ ஜூஸ் ரகத்திற்கு தக்கபடி ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.
இதனை அன்றாடம் ஒரு முறை பயன்படுத்தினாலே குடும்பத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எட்டாத விலையில் விற்கும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாமல் பாமர மக்கள் தவிக்கின்றனர் என்றார்.