sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குறைந்த மின்னழுத்த சப்ளையால் டி.வி., மின் விசிறி பழுதாகும் அவலம் சங்கராபுரம் ஊராட்சி இருளில் மூழ்கும் அவலம்

/

குறைந்த மின்னழுத்த சப்ளையால் டி.வி., மின் விசிறி பழுதாகும் அவலம் சங்கராபுரம் ஊராட்சி இருளில் மூழ்கும் அவலம்

குறைந்த மின்னழுத்த சப்ளையால் டி.வி., மின் விசிறி பழுதாகும் அவலம் சங்கராபுரம் ஊராட்சி இருளில் மூழ்கும் அவலம்

குறைந்த மின்னழுத்த சப்ளையால் டி.வி., மின் விசிறி பழுதாகும் அவலம் சங்கராபுரம் ஊராட்சி இருளில் மூழ்கும் அவலம்


ADDED : ஜூன் 25, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : சங்கராபுரம் ஊராட்சியில் குறைந்த மின் அழுத்த சப்ளையால் வீடுகளில் உள்ள டி.வி., மின் விசிறி, மிக்சி அடிக்கடி பழுதாகி வருகின்றன. ஊரே இருளில் முழ்கி மக்கள் சிரமம் அடைகின்றனர்.

சின்னமனூர் ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி 2 வது வார்டில் கீழப்பட்டி மேற்கு தெரு, கிழக்கு தெரு, மந்தை குளம், அழகர்சாமி கோயில் தெரு, நடுத்தெருக்கள் அடங்கி உள்ளன.

இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 2 மற்றும் 3 வார்டு பகுதியில் மின் டிரான்ஸ்பார்மர், மின் கம்பிகள் அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் இப்பகுதியில் குறைந்த மின் அழுத்த சப்ளை ஏற்பட்டு பெரும்பாலான வீடுகளில் இரவில் விளக்குகள் எரியாமல் இருளில் தவிக்கின்றனர்.

தெருக்களில் ரோடு அமைத்து பல ஆண்டுகளானதால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. கீழப்பட்டி மேற்கு தெரு பகுதியில் மின்கம்பங்கள் இருந்தும் விளக்குகள் இல்லாததால் தெருக்கள் இருளில் மூழ்கின்றன.

சாக்கடை வசதி இன்றி கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி கொசு தொல்லையால் மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரின் நடுவே குடிநீர் தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

பொதுமக்கள் கருத்து

குண்டும், குழியுமான ரோடு


மணிகண்டன்: 2வது வார்டு கீழப்பட்டி மேற்கு தெருவில் ரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலானதால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் டூவீலர் தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சாக்கடை வசதி இன்றி கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்குகிறது.

ரூ.5 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டி முடித்து 7 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக தெருவின் மையத்தில் மின்கம்பங்கள் உள்ளதால் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில்உள்ளது. சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றிடவும், புதிதாக ரோடு வசதி செய்து தர வேண்டும்.

கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு


கணேசன்: 2, 3வது வார்டு பகுதியில் மின் டிரான்ஸ்பார்மர், மின் கம்பிகள், மின்கம்பங்கள் அமைத்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் இப்பகுதியில் குறைந்த அழுத்த மின் சப்ளையால் இரவில் சில வீடுகள் தவிர மற்ற வீடுகளில் விளக்குகள் எரியாமல் இருளில் தவிக்கிறோம்.

இதனால் டி.வி., மின் விசிறி அடிக்கடி பழுதிாகின்றன. தெருக்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்தும், விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி உள்ளன.

பழைய தண்ணீர் தொட்டி ஓடையில் தடுப்புச்சுவர், பாலம் வசதி இன்றி பாலிதீன் குப்பை கழிவுகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. சீரான மின் வினியோகம் செய்ய புதிதாக மின் டிரான்ஸ்பார்மர், மின் கம்பிகளை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீரான மின் சப்ளை தேவை


பரிமளா: குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் மிக்சி, கிரைண்டர் டி.வி., பயன்படுத்த முடியாமல் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மிக்சி, கிரைண்டர் பழுது ஏற்படுவதால் வீடுகளில் சட்னி, மாவு அரைக்கவும், உணவுகள் சமைக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றோம். மின்சப்ளையை சீரமைப்பதோடு, சாக்கடை, ரோடு, பாலம், தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

ஊராட்சியில் தீர்மானம்


ஜி.ஜெயலட்சுமி, தலைவர்: குறைந்த மின் அழுத்த மின் சப்ளையை சரி செய்யும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர், மின் கம்பிகளை மாற்றியமைக்க அமைத்து தர மின்வாரிய அதிகாரிகளுக்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளோம்.

ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 70 லட்சம் மதிப்பில் தர்மத்துப்பட்டி, சங்கராபுரம் பகுதியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. கிழக்கு தெருவில் இருந்து கீழப்பட்டி வரை மெட்டல் ரோடு போடப்பட்டு உள்ளது.

15வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் கீழப்பட்டியில் சுகாதார வளாகம் சீரமைக்கவும், சாக்கடை ஓடை பாலம், தடுப்புச் சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us