/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் குடிநீர் தட்டுப்பாட்டால் உறவினர் வீடுகளுக்கு செல்லும் அவலம் 19 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிப்பு

ADDED : மே 02, 2024 06:05 AM

மூணாறு: மூணாறில் மகாத்மாகாந்தி காலனியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் வசிப்பவர்கள் உறவினர்களின் வீடுகளை தேடிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இக்காலனியில் ஊராட்சி சார்பில் 2005ல் 200க்கும் மேற்பட்ட இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. அங்கு தற்போது 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை உள்பட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
தற்போது அங்கு குடிநீர் பிரச்னை தலை தூக்கி உள்ளது. ஆண்டுதோறும் கோடை மழை கை கொடுக்கும் என்பதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக தோன்றியது இல்லை.
இந்தாண்டு கோடை மழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மூணாறு நகர், காலனி பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் கன்னியாற்றின் குறுக்கே நகரை ஒட்டியும், பெரியவாரை எஸ்டேட் பகுதியிலும் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.3.53 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. பணிகள் பூர்த்தியாகி 2 ஆண்டுகள் ஆகியும் தொடர் நடவடிக்கை இன்றி திட்டம் முடங்கியுள்ளது. அத்திட்டத்தை செயல்படுத்தி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என கடந்த அக்டோபரில் கலெக்டர் ஷீபாஜார்ஜ் தலைமையில் நடந்த மாவட்ட வளர்ச்சி குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் நடவடிக்கை இல்லை.
மகாத்மாகாந்தி காலனி குடியிருப்போர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் விஜயகுமார் கூறியதாவது:
'வீட்டு மனைகள் கொடுத்து 19 ஆண்டுகள் ஆகியும் பட்டா கிடைக்கவில்லை. அதனால் ஆழ்துளை கிணறு உள்பட குடிநீர் தேவைக்கு சொந்தமாக எவ்வித பணிகளும் செய்ய இயலவில்லை. தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், அதனை சமாளிக்க இயலாமல் பெரும்பாலானோர் உறவினர்களின் வீடுகளைத் தேடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு வரி, குடிநீர் கட்டணம் என அனைத்து வரியும் முறையாக செலுத்தியும் அடிப்படை வசதிகள் செய்வதற்கு அதிகாரிகள் முன்வருவது இல்லை.,', என்றார்.