நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : கண்டமனூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சோனைமுத்து 65, கடந்த சில ஆண்டுகளாக இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால் மன உளைச்சலில் இருந்தார்.
நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பார்வதி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.