/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை ரங்கோலி போட்டி நடத்த ஏற்பாடு
/
தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை ரங்கோலி போட்டி நடத்த ஏற்பாடு
தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை ரங்கோலி போட்டி நடத்த ஏற்பாடு
தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை ரங்கோலி போட்டி நடத்த ஏற்பாடு
ADDED : செப் 06, 2024 05:40 AM
தேனி: மாவட்டத்தில் அனைவரும் ஓட்டளிப்பதை வலியுறுத்தி தலா 25 பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு ஓவியம் வரைதல், கட்டுரை போட்டிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் வாக்காளர் சுருக்க திருத்த முகாம், ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஓட்டளிப்பதின் அவசியத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் 'வாக்களிப்பது சிறந்தது -நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற தலைப்பில் தலா 25 பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சுவர் இதழ் தயாரித்தல், 100 வார்த்தைகளில் கட்டுரை எழுதுதல் போட்டிகள், மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
போட்டிகளை நவம்பருக்குள் முடிக்கவும், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜன.,25 ல் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.