/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் கல்லுாரியில் தொழில் முனைவோர் கண்காட்சி
/
மகளிர் கல்லுாரியில் தொழில் முனைவோர் கண்காட்சி
ADDED : ஆக 15, 2024 04:03 AM
கூடலுார், : கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கண்காட்சி, செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலையில் நடந்தது.
மாணவிகள் பலவிதமான பொருள்கள் மூலம் 26 விற்பனை மையங்களை அமைத்திருந்தனர். இனிப்பு வகைகள், பொடி வகைகள், தானிய சத்து மாவு, ராகி, கம்பு, அரிசி மாவு, சமையலுக்கு பயன்படும் தேவையான பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றிருந்தது. தேங்காய் மட்டையால் செய்த சோப்பு டப்பா, தோடு, கீ செயின் போன்றவைகளும் வைக்கப்பட்டிருந்தது. மாணவிகளின் விற்பனை திறனை மேம்படுத்தும் விதமாக தொழில் முனைவோருக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. துணை முதல்வர் வாணி, வணிகவியல் உதவி பேராசிரியை சண்முகப்பிரியா, உணவியல் துறை உதவி பேராசிரியை மணிமேகலை, இயற்பியல் துறை உதவி பேராசிரியை சிந்துஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.