/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிலச்சரிவு பகுதிகளில் வல்லுனர் குழு ஆய்வு நடத்த சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

ADDED : ஆக 10, 2024 06:39 AM
கம்பம்: மேகமலையில் 30 ஆண்டுகளுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை இந்திய புவியியல் துறையின் நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமான வீடுகள், கால்நடைகள், ஏலம், காபி, தேயிலை தோட்டங்கள் சேதமாகின. இதனை தொடர்ந்து சுற்றுப்புறச் சூழல் விஞ்ஞானி மாதவ் காட்கில் அறிக்கையின் பரித்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது வயநாட்டில் நிகழ்ந்தது போன்று 30 ஆண்டுகளுக்கு முன்பு மேகமலையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேகமலை, ஹைவேவிஸ், இந்திராநகர், மணலாறு, இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்தனர். சின்னமனுார் - ஹைவேவிஸ் மலை ரோடு துண்டிக்கப்பட்டது.
வைகையில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடி,வெள்ளத்தில் யானைகளை இழுத்து சென்ற காட்சிகள் அரங்கேறியது.
வருஷநாடு இந்திராநகர் காலனிக்கு மேல் இருந்த மலைக் குன்றுகள் பெயர்ந்து இரவோடு இரவாக பலரை காவு வாங்கியது. தற்போது வயநாட்டு சம்பவத்துடன் தேனி மாவட்ட மக்கள் மேகமலையை நினைவு கூர்கின்றனர். வயநாட்டில் ஏற்பட்டது போல் அன்று மேகமலையில் நடந்தது. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் போராடினர்.
நிலச்சரிவு நடந்த பகுதிகள் இன்றளவு மேகமலையில் அப்படியே தான் உள்ளன.
எனவே தமிழக அரசு இந்திய புவியியல் துறையின் நிபுணர் குழுவை அனுப்பி, மேகமலையில் நில நடுக்கம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என மேகமலை, ஏகன்ஜகா பகுதி, ஹைவேவிஸ், வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.