/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உள்ளூர் தேவை அதிகரிப்பால் வாழைப்பழம் ஏற்றுமதி குறைவு
/
உள்ளூர் தேவை அதிகரிப்பால் வாழைப்பழம் ஏற்றுமதி குறைவு
உள்ளூர் தேவை அதிகரிப்பால் வாழைப்பழம் ஏற்றுமதி குறைவு
உள்ளூர் தேவை அதிகரிப்பால் வாழைப்பழம் ஏற்றுமதி குறைவு
ADDED : ஜூன் 29, 2024 05:36 AM
கம்பம், : உள்ளூர் தேவை அதிகரிப்பால் நல்ல விலை கிடைத்து வருவதால் வாழை ஏற்றுமதி குறைந்துள்ளது.
தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். வாழை , மா, திராட்சை மற்றும் காய்கறி பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடியாகிறது. வாழை 22 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடியாகிறது. நாழிப் பூவன், செவ்வாழை , ஜி 9 , நேந்திரன் , பூவன் உள்ளிட்ட ரகங்கள் சாகுபடியாகியது. கடந்த 2 ஆண்டுகளாக வாழைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. தற்போது செவ்வாழை கிலோ ரூ.45 முதல் 60 வரையிலும், நாழிப் பூவன் ரூ.40 முதல் 55 வரையிலும், ஜி 9 ரூ. 15 முதல் 20 வரையிலும் விலை கிடைக்கிறது.மேலும் ஆந்திராவில் விளைச்சல் இல்லாததால், ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் சென்னை கோவை, திருச்சி, சேலம் போன்ற பெரிய நகரங்களுக்கும் அதிகளவில் விற்பனையாகிறது. உள்நாடு மற்றும் உள்ளூர் தேவை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி குறைந்துள்ளது. மாதத்திற்கு 160 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது ஏற்றுமதியை வியாபாரிகளும் குறைத்து விட்டனர்.
இதற்கு காரணம் இங்கேயே நல்ல விலை கிடைப்பதால் உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து வியாபாரத்தை நடத்த துவங்கி உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், உள்ளூர் தேவை அதிகம். நல்ல விலையும் உள்ளதால் ஏற்றுமதியை குறைந்து அண்டை மாநிலங்கள் மற்றும் உள்ளூர் மார்க்கெட்டுகளுக்கு விற்பனை செய்து வருகிறோம் என்கின்றனர்.