/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடை ஊழியரிடம் ரூ.1.80 லட்சம் வழிப்பறி
/
கடை ஊழியரிடம் ரூ.1.80 லட்சம் வழிப்பறி
ADDED : மே 25, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி டெலிபோன்நகர் சேவியர் ஆரோக்கியராஜ் 55.
பார்மா ஏஜன்சியில் பணிபுரிகிறார். தினமும் மருந்து கடையில் வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்துவது இவரது பணி. மே 22ல் வசூலான ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை மே 23 காலை 10:45 மணிக்கு பேக்கில் வைத்து தோளில் அணிந்து கொண்டு வங்கிக்கு சென்றார். தேனி - மதுரை ரோட்டில் நகைக்கடை அருகே சென்றபோது பின்புறம் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த 2 மர்ம நபர்கள் பணத்துடன் பேக்கை வழிப்பறி செய்து தப்பினர். சேவியர் ஆரோக்கியராஜ் புகாரில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

