ADDED : ஜூலை 12, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டை சேர்ந்தவர் ராசு, இவரது மகன் தினேஷ்குமார் 38, திருமணம் ஆகாத இவருக்கு ஆறு மாதத்திற்கு முன்பு தேனி ரத்தினம் நகரில் பெண் பார்த்துள்ளனர்.
ஆனால் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்தது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தார். உறவினர்கள் ஆறுதல் கூறியும் திருப்தி பெறவில்லை. இரு நாட்களுக்கு முன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தினேஷ்குமார் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். நீண்ட நேரமாக வராததால் சந்தேகம் அடைந்த தந்தை ராசு வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் சமையல் அறையில் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ராசு புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.