/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் ஏலத்தோட்டங்கள் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
இடுக்கி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் ஏலத்தோட்டங்கள் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
இடுக்கி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் ஏலத்தோட்டங்கள் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
இடுக்கி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் ஏலத்தோட்டங்கள் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 24, 2024 05:09 AM
கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் ஏலத்தோட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. பெரும்பாலும் கம்பம், கூடலூர், தேவாரம், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, உத்தமபாளையம் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஏலக்காய் சாகுபடி செய்கின்றனர். தினமும் தேனி மாவட்டத்தில் இருந்து ஏலத்தோட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். கடந்த பல மாதங்களாக மழை இன்றி கடும் வெயில் அடித்தது. அப்போது ஏலச் செடிகள் கருகி விழந்தன. இந்நிலையில் ஒரு மாதமாக பெய்த கனமழையால் ஏலச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அழுகல் நோய் மற்றும் காற்றில் செடிகள் ஒடிந்து விழுந்தது. மகசூல் பாதிப்பு 40 முதல் 50 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மே மாதம் கேரள வேளாண் துறை அமைச்சர் பிரசாத் , நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் ஆகியோர் வண்டன் மேடு, குமுளி, கம்பமெட்டு பகுதிகளில் வறட்சியால் பாதித்த ஏலத்தோட்டங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் கட்டப்பனையில் ஏல விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் கூட்டத்தில், ஏலத்தோட்டங்கள் 40 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. 22 ஆயிரம் ஏல விவசாயிகளுக்கு ரூ.113 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதர பயிர்கள் ரூ.60 கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஏலத்தோட்டங்களை இன்னமும் முழுமையாக கணக்கெடுக்க உள்ளோம் என்றனர். ஆனால் அதன் பின் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இடுக்கியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து சிறப்பு திட்டங்கள் அறிவிக்கவும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் ஏல விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.