/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வலசத்துறை- அத்தியூத்து மலை ரோடு அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு மலை கிராம விவசாயிகள் மகிழ்ச்சி
/
வலசத்துறை- அத்தியூத்து மலை ரோடு அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு மலை கிராம விவசாயிகள் மகிழ்ச்சி
வலசத்துறை- அத்தியூத்து மலை ரோடு அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு மலை கிராம விவசாயிகள் மகிழ்ச்சி
வலசத்துறை- அத்தியூத்து மலை ரோடு அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு மலை கிராம விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 30, 2024 05:01 AM
போடி : போடி அருகே வலசத்துறை - அத்தியூத்து வரை 15 ஆண்டுகளுக்கு பின் ரோடு அமைக்க முதல் கட்டமாக ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வடக்குமலை கிராமம். வலசத்துறை, அத்தியூத்து, இலங்கா வரிசை, சித்தாறு கிலுக்கு ராஜா கோயில், சாமி வாய்க்கால் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. போடி மலை அடிவாரத்தில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் உள்ளது. 300 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களும், 100க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். காபி, மிளகு, இலவம், ஏலம், மா விவசாயம் செய்து வருகின்றனர். மின்சாரம், மருத்துவ வசதி பெற 12 கி.மீ., கடந்து போடிக்கு வர வேண்டும். ரோடுக்கான பாதை இருந்தும் தனி நபரின் ஆக்கிரமிப்பால் விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்தனர். ரோடு வசதி கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வலசதுறை அத்தியூத்து பகுதியில் புதிதாக ரோடு அமைப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மூலம் வன ஒப்படைப்பு செய்ய 12 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது. வருவாய் துறையினர் ரோடு அமைக்க சர்வே மேற்கொண்ட போது தனிநபர் தடுத்ததால் ரோடு பணி தடை பட்டது.
கடந்த மாதம் ரோடு வசதி கேட்டு கலெக்டர் ஷஜீவனா, முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், ஊராட்சி தலைவர் லோகநாதனிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். தனி நபரிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின் ரோடு அமைக்க சர்வே செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். போடி பி.டி.ஓ.,சந்திரசேகர், தாசில்தார் சந்திரசேகர், சர்வேயர் வேல்முருகன் ஆகியோர் சர்வே செய்து மண் அள்ளும் இயந்திரம் மூலம் ரோடுக்கான பாதை சீரமைக்கப்பட்டது.
முதல் கட்டமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வலசத்துறை - அத்தியூத்து வரை ஒரு கிலோமீட்டர் தூரம் ரோடு அமைக்க ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரோடு பணிகள் விரைவில் துவங்க உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.