/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக ஆய்வு
/
உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக ஆய்வு
உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக ஆய்வு
உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக ஆய்வு
ADDED : மே 25, 2024 05:51 AM

கூடலுார், : உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
உரம் கடத்தல், உர இருப்பு, விவசாயம் அல்லாத நிறுவனங்களில் உரம் பயன்படுத்துதல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிவகங்கை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், வேளாண் அலுவலர்கள் பாலகணபதி, நாகராஜ் ஆகியோர் கொண்ட குழு கூடலுார், கம்பம் உள்ளிட்ட தேனி மாவட்டத்தில் உள்ள உரம் பூச்சி மருந்து கடைகளில் நேற்று இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தினர். பல மாதங்களுக்குப் பின் பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வட்டார வேளாண் அலுவலர் மகாவிஷ்ணு, உதவி வேளாண் அலுவலர் சதீஷ் உடன் இருந்தனர்.