/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவிற்கு 25 கிலோ குட்கா சாராயம் கடத்திய ஐவர் கைது ஜீப்பை கைப்பற்றி விசாரணை
/
கேரளாவிற்கு 25 கிலோ குட்கா சாராயம் கடத்திய ஐவர் கைது ஜீப்பை கைப்பற்றி விசாரணை
கேரளாவிற்கு 25 கிலோ குட்கா சாராயம் கடத்திய ஐவர் கைது ஜீப்பை கைப்பற்றி விசாரணை
கேரளாவிற்கு 25 கிலோ குட்கா சாராயம் கடத்திய ஐவர் கைது ஜீப்பை கைப்பற்றி விசாரணை
ADDED : பிப் 24, 2025 02:59 AM

போடி,: மத்திய பிரதேச மாநிலம் மண்டலா பகுதியில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 25 கிலோ குட்கா, வாட்டர் பாட்டில் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பை மதுவிலக்கு போலீசார் நேற்று கைப்பற்றினர். இதில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
கேரளா மாநிலம் பூப்பாறை, ராஜாக்காடு, ராஜகுமாரி பகுதிகளில் உள்ள ஏலத்தோட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் புகையிலை, மது, சாராயம் அருந்துவது வழக்கம். தோட்டம் அமைந்துள்ள இடங்களுக்கும், கடைகளுக்கும் நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டும். இதை பயன்படுத்தி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிலர் இத்தொழிலாளர்களுக்கு குட்கா, புகையிலை, மது, சாராயம் உள்ளிட்டவைகளை கடத்தி வந்து அருகிலேயே வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் குரங்கணி போலீசார் 13 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் மண்டேலா பகுதியை சேர்ந்த ஆனந்ததாஸ் 42, பகத்சிங் 35, தன்பரத் 19, தமேஷ் 40, சர்குமாரி 24, ஆகியோர் குட்காவை கேரளாவில் விற்பனை செய்ய முந்தல் ரோட்டில் ஜீப்பில் கொண்டு சென்றனர். உத்தமபாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூர்ய திலகராணி, எஸ்.ஐ., முருகானந்தம் மற்றும் போலீசார் ஜீப்பை சோதனை இட்டனர். அப்போது குட்கா, சாராயம் கடத்தியது தெரிந்தது. 25 கிலோ குட்கா, நுாதன முறையில் மினரல் தண்ணீர் பாட்டிலில் இருந்த 5 லிட்டர் சாராயம், ஜீப்பை போலீசார் கைப்பற்றினர். ஆனந்ததாஸ் உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.

