/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் சேதமடைந்த வனக்காப்பாளர் குடியிருப்புகள்
/
போடியில் சேதமடைந்த வனக்காப்பாளர் குடியிருப்புகள்
ADDED : மே 02, 2024 05:46 AM

போடி: போடி வனத்துறை அலுவலகத்தில் வனக்காப்பாளர்களுக்கான குடியிருப்புகள் உரிய பராமரிப்பு இன்றி கட்டடம் முழுவதும் சேதமடைந்து காட்சியளிக்கிறது.
போடி வனச்சரதிற்கு உட்பட்ட செக்போஸ்ட்களில் பணிபுரியும் வனக்காப்பாளர்கள் தங்கும் வகைகள் 25 ஆண்டுகளுக்கு முன் போடி வனத்துறை அலுவலகத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. சில ஆண்டுகள் மட்டும் பயன்படுத்தப்பட்ட நிலையில் உரிய பராமரிப்பு இல்லாததால் கட்டடம் முழுவதும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பணியாற்றும் வனவர், வனக்காப்பாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
சேதம் அடைந்த வனக்காப்பாளர் குடியிருப்புகளுக்கான கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து விட்டு புதிதாக குடியிருப்பு கட்ட மாவட்ட வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

